Enable Javscript for better performance
தாழ்த்தப்படோருக்காக பாடுபடும் கட்சி திமுக: தங்கம் தென்னரசு- Dinamani

சுடச்சுட

    

    தாழ்த்தப்படோருக்காக பாடுபடும் கட்சி திமுக: தங்கம் தென்னரசு

    By பாலசுந்தர்ராஜ்  |   Published on : 27th March 2014 05:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thangam

    தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடும் கட்சி திமுக எனக்கூறினார் எம்.எல்.ஏ.தங்கம் தென்னரசு.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் உள்ள சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளிள் புதிய தமிழகம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் திருத்தங்கலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு விருதுநகர் மாவட்டத்தலைவர் கோ.ராமராஜ் தலைமை வகித்தார்.

    இக்கூட்டத்தில் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மேலும் பேசியதாவது:

    தொடக்ககாலத்திலிருந்து திமுக தலைவர் கருணாநிதி தாழ்த்தப்பட்டோருகளுக்கான நலனில் அக்கறை காட்டி வருகிறார்.பரமக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக புதியதமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சட்டப்பேரவையில் கேள்வி கேட்டபோது, சட்டப்பேரவையை விட்டு ஜெயலலிதாஅவரை வெளியேற்றினார்.

    அப்போது அவருக்கு ஆதரவாக திமுக இருந்தது.மாநிலங்களவை தேர்தலின் போது, திமுக ,புதியதமிழகம் கூட்டணி உறுதியானது.இந்தக்கூட்டணி இயற்கையாக அமைந்த கூட்டணியாகும்.தாழ்த்தப்பட்டோருக்காக பாடுபடும் கட்சி திமுகவாகும்.

    விருதுநகர் மக்களவை தொகுதியில் நமது வேட்பாளர் ரத்தினவேல் நிறுத்தப்பட்டுள்ளார்.அவரது வெற்றிக்கு அனைவரும் பாடுபடுவோம் என்றார்.

    இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய தலைவர் எஸ்.மாணிக்கம், திமுக ஒன்றிய செயலாளர் வனராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai