Enable Javscript for better performance
தேர்தல் பயத்தில் பாஜகவை திருமாவளவன் விமர்சித்து வருகிறார்: பாஜக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் பயத்தில் பாஜகவை திருமாவளவன் விமர்சித்து வருகிறார்: பாஜக குற்றச்சாட்டு

    By சுந்தர்ராஜன்  |   Published on : 27th March 2014 03:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    27CMP5

    தேர்தல் பயத்தின் அடிப்படையில் பாஜகவை மதவாத கூட்டணி என திருமாவளவன் விமர்சிக்கிறார் என பாரதிய ஜனதா கட்சி கடலூர் மாவட்ட பொருளாளர் வே.ராஜரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

    சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் ஊழலற்ற தலைமையில் ஆட்சி அமைக்க தேமுதிக, பாமக, ஐஜேகே, கொங்கு வேளாளர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவுடன் ஒரு காலத்தில் திருமாவளவன் கூட்டணி இருந்ததை மறந்துவிட்டு, பாஜக கூட்டணி உமிஅரிசி கூட்டணி என விமர்சித்து வருகிறார். அந்த கூட்டணி தோல்வியுற்றபோதுதான், இவர் உமிகூட இல்லை என எங்களுக்கு தெரிந்தது. கடந்த 5 ஆண்டுகளுக்கு தொகுதிக்கோ, மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அதனால் இவர் சாதனைகளை சொல்ல முடியாமல், மதவாதம், சாதியம் என விமர்சித்து வருகிறார்.

    காங்கிரஸ் கூட்டணி  2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், செய்த போது, அந்த ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தவர் திருமாவளவன். இந்தியா, இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தவர் திருமாவளவன். காங்கிரஸ் வருத்தம் தெரிவித்தால், மதவாத கொள்கை அடிப்படையில் காங்கிரஸிற்கு ஆதரவு அளிப்போம் என கருணாநிதி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார். திமுகவே காங்கிரஸிற்கு மறைமுகமாக ஓட்டு கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பயத்தின் காரணமாக திருமாவளவன் மதவாதம், கலவரம் என இல்லாத ஒன்றை கற்பனை செய்து பேசி வெற்றி பெற முயற்சிக்கிறார்.

    2004 தேர்தலில் ஜார்ஜ் பெர்ணான்டஸ் திருமாவளவனுக்கு பிரசாரம் செய்து பெருமை படுத்தினார். ஆனால் அவரது கட்சிக்கு கிளைகள் கிடையாது என சிறுமைபடுத்தி பேசியுள்ளார். சொந்த தொகுதிக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த ஒரே வேட்பாளர் இந்தியாவில் இவர் மட்டும்தான். மோடி அலையால் இந்த தேர்தலில் சிதம்பரத்தில் திருமாவளவன் போன்றவர்கள் கரையேற முடியாது என வே.ராஜரத்தினம் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai