Enable Javscript for better performance
தேர்தல் விதிமீறல்: நடிகை குயிலி மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் விதிமீறல்: நடிகை குயிலி மீது வழக்கு

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 27th March 2014 10:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நடிகை குயிலி மீது திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கூடுதலாக ஆறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இது குறித்து  வட்ட வழங்கல் அலுவலர் நாகராஜன் அளித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார், பிரசாரத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பத்திருந்த அதிமுக வழக்கறிஞர் அன்பரசன், நடிகை குயிலி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai