Enable Javscript for better performance
பழனியில் மார்ச்.30 தேர்தல் பயிற்சி வகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வரும் மார்ச்.30ம் தேதி பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து பழனி தொகுதி தேர்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான சுந்தர்ராஜ் தெரிவித்ததாவது, பழனி பகுதியை சேர்ந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச்.30ம் தேதி வாக்கில் நடைபெறவுள்ளது.  இந்த பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம், முகவர்கள் பணி, அதிகாரிகளின் பணிவரன் முறைகள் குறித்து மண்டல தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வழங்கவுள்ளனர்.  மூன்று கட்டமாக வழங்கும் இப்பயிற்சியின் போது மூன்றாவது கட்ட பயிற்சி சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பணிபுரியும் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் வழங்கப்படும் என தெரிவித்தார். 

    மேலும் தேர்தல் விதிமுறைகள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai