Enable Javscript for better performance
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சியால் எனது பதவி பறிக்கப்பட்டது: முன்னாள் முதல்வர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சியால் எனது பதவி பறிக்கப்பட்டது: முன்னாள் முதல்வர் எடியூரப்பா

    By தினகரவேலு  |   Published on : 27th March 2014 05:55 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    yediyurappa

    பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சியால் எனது பதவி பறிக்கப்பட்டது என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

    இது குறித்து ஷிமோகாவில் வியாழக்கிழமை அவர் கூறியது: பாஜக ஆட்சியில் சுரங்க முறைக்கேட்டில் என் மீது லோக் ஆயுக்த வழக்கு பதிவு செய்தது. அதில் என் மீது எந்த குற்றமில்லாததால் உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. பாஜக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக என் மீது எதிர்க்கட்சியினர் தேவையில்லாமல் குற்றம் சாட்டியதால் எனது பதவி பறிக்கப்பட்டது. இதற்கு அரசியல் சூழ்ச்சிதான் காரணம்.

    இதற்கு நான் பலிகடா ஆக்கப்பட்டேன். இதற்கு சில ஊடங்கங்களும் அவர்களுக்கு துணை போயின. என்னை அரசியலிலிருந்து ஒழித்து கட்ட யார் என்ன முயற்சி செய்தாலும் அது ஒருநாளும் கைக்கூடாது. நான் நேர்மையாக பணியாற்றினேன் என்பது எனது மனசாட்சிக்கு தெரியும். அரசியலில் நேர்மையானவர்கள் இல்லை என்பது உண்மைதான் என்றாலும் நான் எந்த தவறையும் செய்யவில்லை. இதனை காலம் அனைவருக்கும் உணர்த்தும்.

    அண்மைக்காலமாக பாஜகவின் பலம் உயர்ந்து வருகிறது. பிரிந்த தலைவர்களும் ஒன்றாகியுள்ளோம். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று நரேந்திரமோடி தலைமையில் மத்தியில் ஆட்சியை பிடிப்போம். கர்நாடகத்தில் 20 தொகுதிகளை கைப்பற்றுவோம்.

     பாஜக ஆட்சி அமைத்தால் அதில் நீங்களும் ஒரு அமைச்சராவீர்களா என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். எனக்கு மத்தியில் அமைச்சராகும் ஆசை எல்லாம் இல்லை. அப்போது கட்சி மேலிடம் எந்த முடிவை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai