Enable Javscript for better performance
புதுகையில் சாலைப்பணிகள்  முடிவுறாத நிலையில் சுங்கவரி வசூல்: முற்றுகைப் போராட்டம்- லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    புதுகையில் சாலைப்பணிகள்  முடிவுறாத நிலையில் சுங்கவரி வசூல்: முற்றுகைப் போராட்டம்- லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு

    By ராம்மோகன்  |   Published on : 27th March 2014 04:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!



    திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைப்பணிகள் முடிவுறாத நிலையில் இரு இடங்களில் சுங்கவரி வசூலிப்பதை மத்திய மாநில அரசுக்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சமமேளன மாநிலத்தலைவர் ஆர். சுகுமார்.

    புதுக்கோட்டையில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியது:

      தமிழகத்தில் வாகனங்களில் அதிக பாரம் இல்லாத, விபத்தில்லாத மாநிலமாக உருவாக்கவும், ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகனச்சட்டத்தை மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பின்பற்றாத நிலை நீடிக்கிறது. இதைத்தவிர்த்து அவர்களும்  பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், உள்துறைச்செயலர், முதல்வரின் தனிப்பிரிவு, போக்குவரத்து ஆணையர் ஆகியோருக்கு  லாரி உரிமையாளர் சமமேளனம் சார்பில் மனு  அளித்தது போன்ற நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட்டோம்.

      இப்பிரச்சினை தொடர்பாக லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 26.3.2014 -ம் தேதி சென்னையில் விழிப்புணர்வு பயணம் தொடங்கப்பட்டு, தமிழகம் முழுதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். எனவே, மோட்டார் வாகனச்சட்டத்தை மதித்து நடக்க அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடுமையாக உத்தரவிடவேண்டும்.

    மேவும், அதிக சுமையை லாரிகளில் ஏற்றிவிடும் நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடனழ், அதிக சுமை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் கூடுதல் சுமையை இறக்கி வைக்க உத்தரவிட வேண்டும். அனைத்து அனுமதியும் பெற்று சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுனர்களிடம் போலீஸார் பணம் வசூலிக்கும் செயலைத் தடுக்க வேண்டும். இப்பிரச்சினைகளில் உரிய நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் ஏப்ரல் மாதம் மாநிலம் தழுவிய அறப்போராட்டம் நடத்தப்படும்.


    மேலும், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவு பெறாத நிலையில்,புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சட்டவிதிகளுக்கும் புறம்பாக சுங்கவரி வசூலிக்கும் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இதை மத்திய மாநில அரசுகள் உடனடியாகத்தடுத்து நிறுத்த வேண்டும். அதில், தாமதித்தால் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதுடன், சுங்கவரியையும் செலுத்த மறுக்கும் நிலை ஏற்படும் என்றார்.


    இதில், மாநில நிர்வாகிகள் வி. முருகன், என். தண்டபாணி மற்றும் மாவட்டத்தலைவர் ராம. மகாலிங்கம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த  நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரசுரத்தை மாவட்ட நிர்வாகிகளிடம் அளிக்கிறார், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் ஆர். சுகுமார்(நடுவில்).

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai