Enable Javscript for better performance
போலி ஆவணம் தயாரித்து நில மோசடி வழக்கு: மூவருக்கு தலா ஓராண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    போலி ஆவணம் தயாரித்து நில மோசடி வழக்கு: மூவருக்கு தலா ஓராண்டு சிறை

    By K.Jeyakumar  |   Published on : 27th March 2014 06:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீவில்லிபுத்தூரில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த வழக்கில் மூவருக்கு நீதிமன்றத்தில் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர், பஜனைக்கூடத் தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கர சேதுபதி மறறும் வீரராகன். இவர்களுக்குச் சொந்தமான பாசன மனைப்புறம் நிலம் பெரியகுளம் கண்மாய் பாசனத்தில் உள்ளது. இதனை இவர்களது தாய் கவனித்து வந்தார்.

     இந்த நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வடக்கு கரிசல்குளத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் நிலத்தைப் பார்த்து வந்த பாஸ்கர சேதுபதியின் தாயார் இறந்து விட்டார். மேலும் தண்ணீர் பாய்ச்சி வந்த கோவிந்தன் ஒரு கொலை வழக்கில் சிறைக்குச் சென்றுவிட்டார்.

    இதனால் நிலத்தை சகோதரர்கள் கவனித்து வந்துள்ளார்கள்.சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த கோவிந்தன், சகோதர்களிடம் சென்று மீண்டும் தனக்கு வேலை கேட்டுள்ளார். அவர்கள் உனது நடத்தை சரியில்லை. எனவே வேலையில்லை என்று கூறி விட்டார்கள்.

     இதற்கிடையே பாஸ்கர சேதுபதியும், வீரராகனும் நிலத்தை கோவிந்தனுக்கு விற்றது போல், கோவிந்தன் போலி ஆவணத்தை தயாரித்துள்ளார். இதற்கு சாட்சியாக வடக்கு கரிசல்குளத்தைச் சேர்ந்த பரமசிவம் மற்றும் கோவிந்தராஜ் கையொப்பமிட்டுள்ளனர்.

    25.1.2006-ம் தேதி கோவிந்தன், தான் தயாரித்து போலி ஆவணத்தைக் காட்டி, சகோதரர்களை காட்டிலிருந்து விரட்டியுள்ளார். இது குறித்து சகோதரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அவர்கள் ஆவணத்தை கையெழுத்து நிபுணர்களுக்கு அனுப்பியுள்ளார்கள். அதில் பத்திரம் போலி என தெரியவந்துள்ளது. இதற்கிடைய ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையத்திலிருந்து வழக்கு வன்னியம்பட்டி காவல் நிலையம் உருவாக்கப்பட்டதையடுத்து வழக்கு வன்னியம்பட்டி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

     போலீஸார் வழக்குப் பதிவு செய்து கோவிந்தன், பரமசிவம், கோவிந்தராஜ் ஆகியோரைக் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கவிதா, கோவிந்தனுக்கு மூன்று பிரிவுகளில் ஆன ஒவ்வொரு குற்றத்திற்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்புக் கூறினார்.

     தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.பரமசிவம், கோவிந்தராஜ் ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்புக் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai