Enable Javscript for better performance
மக்களவைத் தேர்தல்: திமுக பொருளர் ஸ்டாலின் நீலகிரியில் 28ம்தேதி பிரச்சாரம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தல்: திமுக பொருளர் ஸ்டாலின் நீலகிரியில் 28ம்தேதி பிரச்சாரம்

    By dn  |   Published on : 27th March 2014 08:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin01

    நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 28ம்தேதி நீலகிரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

     இதுதொடர்பாக திமுக தலைமை தேர்தல் பணிக்குழு செயலர் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளதாவது:

     நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து திமுக பொருளர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 28ம்தேதி வெள்ளிக்கிழமை ஒருநாள் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். வியாழக்கிழமை இரவு கோவை ராஜவீதியில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மேட்டுப்பாளையம் வரும் ஸ்டாலின் இரவு அங்கு தங்குகிறார்.

     தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு குன்னூரில் வி.பி.தெருவிலுள்ள அண்ணா திடலில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதை முடித்துவிட்டு உதகைக்கு சென்று உதகையில் காபி ஹவுஸ் சந்திப்பில் பகல் 12 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதன்பின்னர் பகல் 1 மணிக்கு கட்டபெட்டிலும், பகல் 2 மணிக்கு கோத்தகிரியிலும் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்கிறார். மாலையில் கோத்தகிரியிலிருந்து மீண்டுóம் மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பா.மு.முபாரக் தெரிவித்துள்ளார்.

     நீலகிரி மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் உதகை மற்றும் குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொள்கிறார். கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai