Enable Javscript for better performance
மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் வாசன் பெயர் சொன்னதால் அடிதடி; ரகளை; நாற்காலி வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் வாசன் பெயர் சொன்னதால் அடிதடி; ரகளை; நாற்காலி வீச்சு

    By பசும்பொன்  |   Published on : 27th March 2014 09:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது

    இதில், முன்னாள், இன்னாள் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    அதில், இக்கட்டான நிலையில் நாம் தேர்தலை சந்தித்து வருகிறோம்; வேட்பாளர்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்க நாம் பாடுபட வேண்டும் என்று கூறினர்.

    அப்போது ராகுல்காந்தி பேரவை செயலர் செல்வக்குமார், இப்போது கட்சி நிலை பற்றி பேசவேண்டாம்; வாசன் போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்கள் கட்சியைப் பார்த்துக்  கொள்வார்கள். நாம் இப்போது தேர்தல் வேலையை மட்டும் பாக்கலாம் என்று கூறினார். இதற்கு மாநில பொதுச் செயலர் பழனிவேலு உள்ளிட்டோர், வாசனைப் பற்றி இங்கே பேசக்கூடாது என்று கண்டித்தனர்.

    இதை அடுத்து, செல்வக்குமார் மற்றும் பைரவகுமாருக்கு அடிதடி. கைகலப்பு ஏற்பட்டது. இரு கோஷ்டிகளாகப் பிரிந்து நாற்காலி வீச்சிலும் ஈடுபட்டனர். அரை மணி நேரம் களேபரம் நடந்தது.

    சிறிது நேரம் கூட்டத்தை நடத்தி வைத்து, பின்னர் ஒரே ஒரு தீர்மானம் நிறைவேற்றி அனைவரும் வெளியேறினர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai