Enable Javscript for better performance
மனோகரனுக்கு தூக்கு தண்டனை: தீர்ப்பை கருணாநிதி, ராமதாஸ் ஏற்றுக்கொள்வார்களா? காங்கிரஸ் கேள்வி- Dinamani

சுடச்சுட

    

    மனோகரனுக்கு தூக்கு தண்டனை: தீர்ப்பை கருணாநிதி, ராமதாஸ் ஏற்றுக்கொள்வார்களா? காங்கிரஸ் கேள்வி

    By சுந்தர்ராஜன்  |   Published on : 27th March 2014 07:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    congress-logo

    கோயம்புத்தூரில் இரு குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த மனோகரனுக்கு தூக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பை, தூக்கு தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, ராமதாஸ், சீமான், பாரிவேந்தர், தமிழருவி மணியன், திருமாவளவன் ஆகியோர் ஏற்பார்களா? என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுகுறித்து கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளர் கே.ஜி.குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயம்புத்தூரில் ரஞ்சித்ஜெயின் என்ற தொழிலதிபரின் 10 வயது பெண் குழந்தை, 7 வயது ஆண் குழந்தை ஆகிய இருவரையும் கடந்த 2010 அக்டோபர் 20-ம் தேதி காரில் கடத்திச் சென்று படுகொலை செய்த மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்ததை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்கிறோம்.

    இவ்வழக்கை விசாரணை செய்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் நவம்பர் 1-ம் தேதி மனோகரனுக்கு தூக்கு தண்டனை விதித்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரணை நடத்தி மனோகரனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. கோவை மாவட்ட மக்கள் இந்த தீர்ப்பினை நரகாசூரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனை போல் கருதி, இனிப்பு வழங்கி, வெடி, வெடித்து கொண்டாடி வருகின்றனர் என கே.ஜி.குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai