Enable Javscript for better performance
மயிலாப்பூரில் இளைஞர் கொலை : 6 மணி நேரத்தில் 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    
    murder

    26ம் தேதி (புதன்கிழமை) மாலை மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சு.மு.மடம் சாலையில் மயிலாப்பூர் மாதவராவ் கார்டனை சேர்ந்த தமிழ்செல்வன் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    காவல்துறையினர் தனித்தனி குழுவாக  அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடிச்சென்று,  சம்பவத்தில் ஈடுபட்ட  குமார் என்கிற வெள்ளை குமார்(40), அவனுடைய நெருங்கிய கூட்டாளிகள் கொடுங்கையூரை சேர்ந்த இளையகுமார்(24), பெரம்பூர் பெரியார் நகரை சேர்ந்த ராஜபூபதி (23) ஆகியோரை சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் தடயங்களான கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai