Enable Javscript for better performance
மான் வேட்டை: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே மான் வேட்டையாடியதாக காவேரி, மைத்திராஜன் ஆகிய இருவரை கிருஷ்ணகிரி மாவட்ட வனத் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி பேருந்து நிலையம் அருகே வனக் காப்பாளர்கள் மகேந்திரன், குபேந்திரன், கங்கை அமரன், வனக் காவலர் சின்னத் தம்பி ஆகியோர் ரோந்துப் பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, பேருந்து நிலையத்தில் சந்தேகம்படும்படி இருவர் நின்றிருந்தனர்.

    அவர்கள் ஊத்தங்கரை அருகே உள்ள வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த காவேரி(37), மைத்தி ராஜன் (47) எனத் தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் துண்டிக்கப்பட்ட நிலையில் 4 மான்கால்கள், 4 பொட்டலங்களில் மான் கறி (மாமிசம்) இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத் துறையினர் வழக்குப் பதிந்த அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai