Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன், முதல் நாளான மார்ச் 29ல் மனு தாக்கல்- Dinamani

சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் வேட்பாளர் பா.விக்ரமன், முதல் நாளான மார்ச் 29ல் மனு தாக்கல்

    Published on : 27th March 2014 07:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பா.விக்ரமன், மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கும் முதல் நாளான சனிக்கிழமை (மார்ச் 29), மனு தாக்கல் செய்ய உள்ளார்.

     மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள சிஐடியு-வின் நிறுவனத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பி.ராமமூர்த்தியின் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வந்து மனு தாக்கல் செய்யவுள்ளார்.

     இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதச் சார்பற்ற ஜனதா தளம், அருந்தமிழர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai