Enable Javscript for better performance
முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு   3 தேர்தல் பறக்கும் படை அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு   3 தேர்தல் பறக்கும் படை அமைப்பு

    By தன.திராவிட மணி,  |   Published on : 27th March 2014 02:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி அளவில், 3 தேர்த்ல பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

     ராமநாதபுரம் மக்களவை தொகுதியி்ல் முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி அடங்கி உள்ளது. இந்த தொகுதியி்ல் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்கள் உள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்த்ல விதிமுறை மீறலைக் கண் காணித்து உரிய நடவடிக்கைகள் தடுப்பதற்கு 3 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.தனி துணை வட்டா ட்சியர் வீரராஜா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கண்ணதாசன், குணசேகரன் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கு ம் படையி்ல போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களும் அடங்கி உள்ளனர்.

    இது தவிர கூட்டுறவு அதிகாரிகள் குமரன், தண்ட பாணி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான 3 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்தல் விதி முறைகளை மீறும் அரசியல் கட்சியினரைக் கண்டு பிடித்து, போலீஸில் புகார் செய்து, வழக்குகள் பதிவு செய்ய வைப்பதி்ல் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணி்ப்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai