Enable Javscript for better performance
ரசிகர்கள் எம்பியாக்குவார்களா? மும்பையில் சுயேட்சையாக ராக்கி சவந்த் போட்டி - Dinamani

சுடச்சுட

    

    ரசிகர்கள் எம்பியாக்குவார்களா? மும்பையில் சுயேட்சையாக ராக்கி சவந்த் போட்டி

    By dn  |   Published on : 27th March 2014 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Rakhi-Sawant

    இந்திப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கலங்கடித்துள்ள நடிகை ராக்கி சவந்த், மும்பையில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

    மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராக்கி சவந்த், மக்களின் உரிமைகள் பறிபோய் விட்டன. மக்களுக்காக போராட தேர்தலில் நிற்கிறேன், பெண்களின் உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் போராடுவேன்.

    நான் தேர்தலில் நிற்க வேண்டும் என்று மக்கள் தான் ஆசைப்பட்டனர். அவர்களுக்காகவே நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

    பாஜகவில் இருந்து அழைப்பு வந்ததாகவும், அதனை மறுத்து விட்டதாகவும் சில தகவல்கள் கசிந்தன.

    நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு தேர்தலில் நிற்கும் ராக்கி சவந்தை, அவர்களது ரசிகர்கள் எம்பியாக்கி நாடாளுமன்றத்துக்கு அனுப்புவார்களா? இப்போதைய காரசார விவாதமே இதுதான் என்கிறது மும்பை வட்டார பட்சி ஒன்று.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai