Enable Javscript for better performance
ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவேன்-இ.கம்யூ. வேட்பாளர் உமா மகேஸ்வரி- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நிரந்தர நீர்ப்பாசன வசதி ஏற்படுத்துவேன்-இ.கம்யூ. வேட்பாளர் உமா மகேஸ்வரி

    By தன.திராவிட மணி,  |   Published on : 27th March 2014 05:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Cpi

    ராமநாதபுரம் மாவட்டத்தி்ல் நிரந்தர நீர்ப்பாசன வசதி்காக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று கமுதியில் நேற்று(புதன் கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இ.கம்யூ. வேட்பாளர் உமா மகேஸ்வரி கூறினார்.

         கமுதியி்ல் தாலுகா, நகர மற்றும் கிளை இந்திய கம்யூனி்ஸடு மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிகளின் ஊழியர் கூட்டம் மற்றும் இராமநாதபுரம் மக்களவை தொகுதி இ.கம்யூ. வேட்பாளர் உமா மகேஸ்வரி அறிமுக கூட்டமும், பசும்பொன் தேவர் திருமண மகாலில் நடைபெற்றது. தாலுகா செயலர்கள் குருநாதன்(இ.கம்யூ), முத்து விஜயன்(மார்க்சிய.கம்யூ) ஆகியோர் தலைமையும் மாவட்ட செயலர்கள் ஏ.கோவிந்தசாமி(மா.கம்யு), என்.ராஜன்(இ.கம்யூ) ஆகியோர் முன்னிலையும் வகித்தனர். மாநில நிர்வாக்ககுழு உறுப்பினர் லெனின் சிறப்புரையாற்றினார். கூட்டத்தி்ல் வேட்பாளர் உமா மகேஸ்வரி பேசியது:  

     விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு நியாயமான அதிக விலை கிடைக்கச் செய்வேன். மிளகாய் உற்பத்தியில் மேலும் அதிக விலை கிடைக்கும் வகையில் மிளகாய் எண்ணெய் உற்பத்தியை விரிவாக்கம் செய்வேன் அரசியல் லாபம், சொந்த லாபம், பிறர் லாபம் என்று எந்த லாபமும் கருதாமல், மக்கள் சேவையே பெரிய லாபம் என்ற உணர்வில் மக்கள் நன்மைக்காக அயராது பாடுபடுவேன் என்றார்.

          கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்டைச் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மயி்ல் வாகனன், முருகன், தாலுகாக்குழு உறுப்பினர் கருப்பையா, கடலாடி தாலுகா இந்திய கம்யூனிஸ்டு செயலர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai