Enable Javscript for better performance
லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் பலி

    By மதுராந்தகம்  |   Published on : 27th March 2014 09:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுராந்தகம் அருகே லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற லாரி டிரைவர் பலியான் சம்பவம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

    வானூர் தாலுக்கா, கமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரிமுத்து. அவரது மகன் கண்ணதாசன். வயது 26. லாரி டிரைவர். சம்பவத்தன்று தனது உறவினரான வின்னரசனுடன், மோட்டார் சைக்கிளில் சோத்துப்பாக்கம் சென்றார். அப்போது பின்னால் வநத லாரி எதிர்பாராத வகையில், மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்து கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். உடன் வந்த வின்னரசன் பலத்த காயத்துடன் செங்கல்பட்டு சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் பலராமனை, போலீசார் கைது செய்தனர். இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai