Enable Javscript for better performance
விபத்தில் பெண் டாக்டர் பலி: ரூ. 1.54 கோடி இழப்பீடு வழங்க மாநகரப் பஸ் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் பெண் டாக்டர் பலி: ரூ. 1.54 கோடி இழப்பீடு வழங்க மாநகரப் பஸ் கழகத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

    By சென்னை  |   Published on : 27th March 2014 09:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாநகரப் பஸ்ஸில் இருந்து கீழே விழந்து இறந்த பெண் டாக்டர் குடும்பத்துக்கு ரூ. 1.54 கோடி வழங்க வேண்டும் என மாநகப் பஸ் கழகத்துக்கு மோட்டார் வாகன விபத்து கோரும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    என்.சந்திரமெüலி ஹரிஹரன் மோட்டார் வாகன விபத்து கோரும் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மனைவி பெயர் நீதுஹரிஹரன். எங்களுக்கு இரண்டு மைனர் குழந்தைகள் உள்ளன.

     எனது மனைவி வேலைக்குச் செல்வதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24-ஆம் தேதி சைதாப்பேட்டை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வந்தேன். அவர், சைதாப்பேட்டையிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் மாநகரப் பஸ் (வழித்தடம் 19பி)ஸில் ஏறினார். அப்போது, டிரைவர் பஸ்ûஸ தாறுமாறாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டியதால் எனது மனைவி பஸ்ஸிலிருந்து கீழே விழுந்தார்.

      அதில், அவரது மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து ரத்தம் வழிந்து மயங்கி விழுந்தார். அவரை மலர் மருத்துவமனையில் நரம்பியல் துறை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தேன். கடந்த 2010-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி இறந்தார். இந்த விபத்துக்கு மாநகரப் பஸ் டிரைவர் தான் பொறுப்பாளர்.

      மாநகரப் பஸ் நிறுவனம்தான் இழப்பீடு வழங்க வேண்டும். எனவே, எனது மனைவி இறப்புக்காக ரூ. 3 கோடி இழப்பீடாக வழங்க மாநகரப் பஸ் கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

     இந்த மனு மோட்டார் வாகன விபத்து கோரும் தீர்ப்பாயம் நீதிபதி எஸ்.டி.பரிமளா முன்பு விசாரணை நடந்தது. மனுதாரர் அவரது மனைவியை இழந்துள்ளார். அவரது இரண்டு மைனர் குழந்தைகள் தாயை பிரிந்துள்ளனர். நீதுவின் பெற்றோர்கள் மகளை இழந்துள்ளனர். 

     மனுதாரரின் இறந்த மனைவி நீது செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் காது, மூக்கு மற்றும் தொண்டைப் பிரிவில் அசோசியேட் பேராசிரியராக பணிபுரிந்துள்ளார்.

     மாத வருமானமாக ரூ. 2 லட்சத்து 500 பெற்றுள்ளார். மேலும், மருத்துவச் செலவாக ரூ. 28.69 லட்சம் செலவு செய்துள்ளனர். மேலும், இறந்த நீது விபத்தின் போதும், சிகிச்சையின் போது சொல்ல முடியாத வலியோடும், துயரத்தோடும் அவரது வாழ்க்கையோடு போராடியுள்ளார். எனவே, அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு மொத்த இழப்பீடாக ரூ. 1.54 கோடியை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இரண்டு மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என மாநகரப் பஸ் கழகத்துக்கு உத்தரவிடப்படுகிறது என நீதிபதியின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai