Enable Javscript for better performance
விருதுநகரில் கேந்திரிய வித்யாலய பள்ளியை கொண்டு வந்துள்ளேன்: மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்- Dinamani

சுடச்சுட

    

    விருதுநகரில் கேந்திரிய வித்யாலய பள்ளியை கொண்டு வந்துள்ளேன்: மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர்

    Published on : 27th March 2014 07:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vnr27congres

    விருதுநகர் மக்களின் நீண்டநாள் கனவான கேந்திரிய வித்யாலயா பள்ளியை கொண்டு வந்துள்ளதாக மக்களவை மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.

         விருதுநகர் நகராட்சி பகுதியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், தற்போதைய எம்.பி தனது ஆதரவாளர்களுடன் நடைபயணமாக மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்தார். இப்பகுதியில் இளங்கோவின் தெரு, கம்பர் தெரு, சுப்பையாபிள்ளை தெரு, புதுத்தெரு, மணிநகரம், முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தார்.

        இதில், முத்துராமன்பட்டியில் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பிரசாரம் செய்து பேசியதாவது: விருதுநகர் மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதேபோல், நகராட்சி பகுதிகளில் குடிநீர் போக்குவதற்கு தெருவுக்கு தெரு சின்டெக்ஸ் தொட்டியும் அமைத்துக் கொடுத்துள்ளேன். அதையடுத்து, கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணில் பொதுமக்களின் நீண்டநாள் கனவான கேந்திரிய வித்யாலயாவை கொண்டு வந்துள்ளேன்.
        இந்த மக்களவை தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வீடில்லாத ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கான்கிரீட் வீடு அமைக்கவும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி நிறைவேற்றிக் கொடுக்கப்படும். அதற்கு, பொதுமக்கள் ஆகிய நீங்கள் மீண்டும் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேட்டுக் கொண்டார்.
        அப்போது உடன் மாவட்ட தலைவர் வேலாயுதம், ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்கத்தின் செயலாளர் பாலசுப்பிரமணியம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி, நகர தலைவர் பாப்கான் கார்த்திகேயன், கவுன்சிலர் பேபி உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai