Enable Javscript for better performance
ஸ்டாலினுடன் மோதலா? வதந்திகளுக்கு பதில் சொல்ல நேரமில்லை என்கிறார் குஷ்பு- Dinamani

சுடச்சுட

    

    ஸ்டாலினுடன் மோதலா? வதந்திகளுக்கு பதில் சொல்ல நேரமில்லை என்கிறார் குஷ்பு

    By dn  |   Published on : 27th March 2014 02:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kushbu

    திமுகவில் சூடுபறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள சினிமா நடிகை குஷ்புவிடம், ஸ்டாலினுடன் உங்களுக்கு மோதல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறதே என்று செய்தியாளர் கேட்டதற்கு, வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்று பதிலளித்துள்ளார்.

    ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஸ்டாலின் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில், அடிப்படையற்ற இத்தகைய வதந்திகளுக்கு பதில் சொல்ல எனக்கு நேரம் இல்லை. யூகத்தின் பேரில் கேட்கப்படும் இத்தகையை கேள்விகளுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

    கட்சியில் எனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தால் நான் தி.மு.க.வில் இருந்து விலகி இருப்பேன். ஆனால் இன்னமும் நான் தி.மு.க.வில்தான் இருக்கிறேன். சூறாவளி சுற்றுப் பயணத்துக்கு தயாராகி வருகிறேன் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai