Enable Javscript for better performance
அக்னி நட்சத்திரம் தொடக்கம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு இன்று முதல் தாராபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    அக்னி நட்சத்திரம் தொடக்கம்: ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு இன்று முதல் தாராபிஷேகம்

    By dn  |   Published on : 04th May 2014 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thiruvannamalai kovil

    அக்னி நட்சத்திரம் தொடங்குவதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.

    இக் கோயிலில் ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் தொடங்கி, அது முடியும் வரை தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால், திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 4) முதல் தாராபிஷேகம் நடத்தப்படுகிறது.

    தாராபிஷேகம்:

    பஞ்ச பூத ஸ்தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. அக்னி நட்சத்திரத்தில் வெயிலின் அளவு அதிகரிப்பதால், மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரரை குளிர்விப்பதற்காக தாரா பாத்திரம் ஒன்றைப் பொருத்தி அபிஷேகம் நடத்துவது பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் உச்சிகாலப் பூஜையின்போது ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் மூலவருக்கு மேல் பாத்திரம் ஒன்றைக் கட்டி தொங்கவிடுவர். அந்த பாத்திரத்துக்குள் பன்னீர், வெட்டிவேர், பன்னீர் உள்ளிட்டவற்றை நிரப்பி வைப்பர்.

    பாத்திரத்தின் அடியில் உள்ள சிறிய துவாரம் வழியாக அருணாசலேஸ்வரர் லிங்கம் மீது குளிர்ச்சியான பன்னீர் சொட்டு, சொட்டாக விழும்.

    28-ம் தேதி வரை:

    இந்த தாராபிஷேகம், அக்னி நட்சத்திரம் முடியும் நாளான இம் மாதம் 28-ம் தேதி (புதன்கிழமை) வரை தொடர்ந்து நடைபெறும். கடைசி 3 நாட்களான மே 26, 27, 28-ம் தேதிகளில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்திப் பூஜை நடைபெறும் என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai