சுடச்சுட

  
  dam_gumudipoondi

  கேரளத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, இடுக்கி அணையை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி ஆர்ச் டேம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் சிறுதோணியில் உள்ளது. தமிழகத்தில் இருந்து எடுத்துக் கொண்டால், தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து, தமிழகத்தின் மேற்கு எல்லையான கம்பம்மெட்டு வழியே 60 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

  இடுக்கி சிறுதோணி நகரத்தில் 839 அடி உயரமுள்ள குறவன்மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து 555 உயரத்திற்கு ஆர்ச் வடிவத்தில் இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளது. இதன் நீர்த்தேக்கப்பரப்பு 36 ஆயிரம் ஏக்கர் (86 சதுர கி.மீ.) ஆகும்.

  இந்த அணையில், 72 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படுகிறது (முல்லைப் பெரியாறு அணையைவிட 5 மடங்கு நீர்த்தேக்கும் அளவில் பெரியது).

  இங்கிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் மூலம் மூலமட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத்தில் 6 ஜெனரேட்டர்கள் மூலம் 780 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

  கேரள மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகவும் பாதுகாப்பான இந்த அணையை, ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டின்போது மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் பார்வையிடவும், அணையில் படகு சவாரி செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள்.

  இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை முதல் இடுக்கி அணையைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  அணைப் பகுதியில், பிளாஸ்டிக் பொருள்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அணையை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் ஏதாவது தேசிய அடையாள அட்டையை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும், வரும் செப்.30 வரை சுற்றுலாப் பயணிகள் அணையை பார்வையிடலாம் என்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் அஜீத் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai