சுடச்சுட

  

  பழமையான நாளந்தா பல்கலை கழகத்தில் இன்று முதல் வகுப்புகள் துவக்கம்

  Published on : 01st September 2014 09:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Nalanda_University

  பீகார் மாநிலத்தில் உள்ள பழமையான நாளந்தா பல்கலை கழகம் இன்று முதல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த பல்கலைக்கழகத்தில் இன்று காலை  9 மணிக்கு உயிரினங்களின் வாழ்வியல் மற்றும் சுற்றுபுறவியல் குறித்த படிப்புகள் மற்றும் வரலாற்று படிப்புகள் குறித்த வகுப்புகள் நடக்க உள்ளது. தற்போது 15 மாணவர்கள் மற்றும் 11 ஆசிரியர்களும் உள்ளனர்.

  உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டட மாணவர்கள் இங்கு பயில விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஒருவர் ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் மற்றொருவர் பூடான் நாட்டை சேர்ந்தவர் என நாளந்தா பல்கலை கழக துணை வேந்தர் கோபா சபர்வால் தெரிவித்துள்ளார்.

  மேலும் அவர் கூறும் போது  இம்மாதம் 14ம் தேதி மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை தர உள்ளார்.  அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai