சுடச்சுட

  

  பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

  By dn  |   Published on : 03rd September 2014 01:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Madurai_court_bench

  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதிக்காண் மதிப்பெண் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

  இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 19 பேர் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

  மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை என்றும், ஆனால், பணி நியமனங்களை வழங்கக் கூடாது என்றும் இடைக்காலத் தடை பிறப்பித்து உத்தரவிட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai