Enable Javscript for better performance
அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சோனியாவுக்கு கடிதம் எழுதவில்லை: சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சரவை விரிவாக்கம் குறித்து சோனியாவுக்கு கடிதம் எழுதவில்லை: சித்தராமையா

    By முத்துமணி  |   Published on : 14th September 2014 06:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.இது குறித்துமைசூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    அமைச்சரவையை திருத்தியமைக்கும் திட்டம் எதுவுமில்லை. அமைச்சரவை விரிவாக்கம் செய்வது குறித்தும் எதுவும் முடிவெடுக்கவில்லை. வடகர்நாடகத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் தத்தளித்துள்ளனர். மக்களின் குறைகளை போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறேன். வெள்ளநிவாரணப்பணிகளை தொடர்ந்துகண்காணித்து கடமையை செய்துவருகிறேன். அதேபோல, நான் செய்ய வேண்டிய பணிகள் மலைபோல் குவிந்துள்ளன. அப்பணிகளை செய்துமுடிப்பது குறித்து சிந்தித்து செயல்பட்டுவருகிறேன். அதற்காக அமைச்சரவையை விரிவாக்கம் செய்யமாட்டேனோ என்று நினைக்க வேண்டியதில்லை. சரியான நேரத்தில் கட்சிமேலிடத்தின் கவனத்திற்கு கொண்டுவந்து, அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் தற்போதைக்கு அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு கடிதம் எதுவும் நான் எழுதவில்லை. அதுபற்றி வெளியாகியுள்ள செய்தி வெறும் வதந்தி அவ்வளவே என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai