Enable Javscript for better performance
அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீர் மாயம்

    By ஜெயபாண்டி  |   Published on : 14th September 2014 05:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் அரசு காப்பகத்தில் இருந்த 2 பெண்கள் திடீரென மாயமானதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மதுரை திருப்பாலையில் அரசு பெண்கள் காப்பகம் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த நூரின், கன்னியாகுமரி மாவட்டம் வலைசேரி பகுதியைச் சேர்ந்த லாவன்யா ஆகியோர் தங்கியிருந்தனர்.சனிக்கிழமை பகலில் இருவரும் காப்பக அலுவலர்கள் அனுமதி பெற்று வெளியே சென்றவர்கள் திரும்பவில்லையாம். ஞாயிறு பகல் வரை காப்பகத்துக்கு இரு பெண்களும் வராததால் சந்தேகமடைந்த காப்பக கண்காணிப்பாளர் விஜயலட்சுமி ஊமச்சிகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai