Enable Javscript for better performance
அரியலூர் தம்பதி வெட்டிக் கொலை: பிடிபட்ட குற்றவாளி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் தம்பதி வெட்டிக் கொலை: பிடிபட்ட குற்றவாளி

    By மீனாட்சி சுந்தரம்  |   Published on : 14th September 2014 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் செந்துறை அருகேயுள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (36). தனியார் சிமென்ட் ஆலையின் ஒப்பந்ததாரரர். இவரது மனைவி பார்வதி மற்றும் அவர்களுடைய மகள் கீர்த்தனா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபொது மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அதே போன்று கடந்த 29ம் தேதி கல்லங்குறிச்சி சாலையில் அரசு சிமெண்ட் ஆலை எதிரே குடிசையில் வசித்துவந்த லட்சுமி(70) மற்றும் அவருடைய மகள் சரஸ்வதி(35) ஆகியோர் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக அரியலூர் காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல்ஹக் தலைமையில் 5 தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடிவந்தனர்.

    இந்நிலையில் தலைவாசல் அருகே ஒரு கடையில் திருடியதாக ஒருவனை மல்லியக்கரை போலீஸார் பிடித்தனர்.அவனிடம் விசாரித்தபோது, ஆத்தூர் அருகே உள்ள கத்தரிக்குளம் பகுதியைச் சேர்ந்த அன்னக்கரை மகன் சுப்பராயன் என்பதும், லாரி கிளினராக வேலைப் பர்த்துவந்ததாகவும்,வேலை தேடி அரியலூர் வந்தபோது தனியாக வசித்துவந்த வேல்முருகன் வீட்டில் நுழைந்து பணம், நகை திருடியபோது அவர்களை கொலை செய்ததாகவும். மேலும் சரஸ்வதி என்ற பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும்,அதனை கண்ட அவரது அம்மா லட்சுமியையும் கொலை செய்ததை ஒப்புகொண்டான். இது போன்று பல்வேறு மாவட்டங்களில் பல கொலைகள் செய்திருப்பதாக கூரப்படுகிறது. இதனையடுத்து அரியலூர்,விழுப்புரம், மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.      

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai