Enable Javscript for better performance
இளம் வழக்குரைஞர்கள் சட்ட நுணுக்கங்களை நன்றாக அறிய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    இளம் வழக்குரைஞர்கள் சட்ட நுணுக்கங்களை நன்றாக அறிய வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

    By dn  |   Published on : 14th September 2014 04:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்ட நுணுக்கங்களை இளம் வழக்குரைஞர்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

    வழக்குரைஞர்கள் சமூக நீதி பேரவை புதிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மாநில தலைவர் பாலு தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் நாராயணகுமார் வரவேற்றார். செயலாளர் சரவணன், பாலாஜி, பொருளாளர் இந்திராணி, கஜேந்திரன், இணை செயலாளர்கள் ஜெயராமன், தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்று வரை சட்டக்கல்லுôரிகள் துவங்கப்படவில்லை. தற்போது உள்ள வழக்குரைஞர்கள் சரியாக படிப்பது இல்லை. கள் தங்களைப் பற்றி பிறர் பேச வேண்டுமானால் சட்டத்தில் உள்ள நுணுக்கக்கங்களை இளம் வழக்குரைஞர்கள் நன்று கற்று அறிய வேண்டும். இளம் வயதிலேயே நீதிபதியாக முயற்சிக்க வேண்டும்.  எதிர்காலத்தில் வரும் வழக்குரைஞர்கள் அறிவுப்பூர்வமாக தங்களை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

    சமூக நீதிகள் இன்னும் தலைத்தூக்காமல் உள்ளது. அது 2016-ல் சமநிலையில் இருக்கும். நமது சமூகத்தில் 62 பெண் வழக்கறிஞர்கள் நீதிபதியாகி இருப்பது பெருமையான ஒன்று. பெண் வழக்குரைஞர்கள் அதிகம் பேர் நீதியரசியாக வேண்டும் என்றார் ராமதாஸ்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai