Enable Javscript for better performance
கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி, மங்கலம் புறவழிச்சாலை ஐயப்பன் கோவில் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து தவிந்த மானை, தீயணைப்புதுறையினர் உதவியுடன் வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை உயிருடன் மீட்டனர்.

    அவிநாசி, புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்படட கோதபாளையம், வலையாபாளையம், வண்ணாற்றாஙகரை பகுதியில் சுமார் 80 ஏக்கருக்கும் மேல் வனப்பகுதி உள்ளது. இங்கு மான், மயில், முயல் உள்ளிட்ட வன உயிரினங்கள வாசித்து வருகின்றனர். இவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காவும் வனப்பகுதியை விட்டு வெளியேறுகின்றன. இவ்வாறு வெளியேறும் மான், மயில் உள்ளிட்டவை நாய்கள் துரத்தியும், வாகனங்களில் அடிபட்டும் உயிரிழந்து வருகிறது.

    இந்நிலையில் அவிநாசி சபரி சாஸ்தா வீதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவருக்குச் சொந்தமான கிணறு உள்ளது.  கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவ்வழியே வந்த புள்ளி மான் கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இசம்பவம் அப்பகுதி மக்களுக்கு வெள்ளிக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஆகியோர் 80 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இருக்கும் மானை மீட்க முயன்றனர், இருப்பினும் இயலவில்லை.

    இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு வனவர் முருகேஷ், வனவிலங்கு வேட்டைத் தடுப்பு பாதுகாவலர் பாலசுந்தரம், பணியாளர்கள் நாகராஜ், முருகேசன் மற்றும் முன்னணி தீயணைப்பு அலுவலர்கள் பாலசுப்பிரணமணியம், மருதமுத்து, காவலர்கள் மோகன், சந்தோஷ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் கிணற்றுக்குள் தவிக்கும் மானை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றுக்குள் விழுந்த தவித்த இரண்டரை வயதுள்ள ஆண் புள்ளி மான் சிறுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது. தாகத்தில் தவித்த மானுக்கு மக்கள் ஆர்வத்துடன் தண்ணீர் கொடுத்து, சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு செல்வதற்காக சரக்கு ஆட்டோ மூலம் அனுப்பிவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai