Enable Javscript for better performance
குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சிமாவட்டம் முசிறி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நெய்வேலி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு போதிய அளவு தேவையான குடிநீர் விநியோகம் கிடைக்கப்பெறாமல் சிரமபட்டு வருவதாகவும், இது குறித்து ஊராட்சி தலைவர் மற்றும் அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளதால் குடிநீர் பிரச்சனை அதிகளவில் நிலவி வருகிறது, என கோபமடைந்த அப்பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முசிறியில் இருந்து  - திருப்பைஞ்சீலி செல்லும் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இத்தகவல் பெற்ற கதர் மற்றும் கிராமத்தொழில்துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி  சம்ப இடத்திற்க்கு விரைந்து சென்று பொதுமக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சில தினங்களில் குடிநீர் வழங்க ஏற்ப்பாடு செய்யப்படும் என உறிதியளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர், இதனால் அப்பகுதியில் சிறிது நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai