Enable Javscript for better performance
கொலையாளிகளை வேட்டையாடுவோம்: கேமரூன்- Dinamani

சுடச்சுட

    

    தொண்டு நிறுவன ஊழியர் ஹெய்ன்ஸ் தலையைத் துண்டித்துக் கொடூரமான முறையில் கொலை செய்தவர்களை வேட்டையாடுவோம் என்று பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கூறினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    டேவிட் ஹெய்ன்ஸின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோதனை மிகுந்த இந்த வேளையில் அவர்கள் தைரியத்தையும் மன உறுதியையும் வெளிப்படுத்தி வந்துள்ளனர்.மனிதாபிமானத் தொண்டாற்றி வந்த ஒரு அப்பாவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தீய சக்திகளின் செயலாகும். எங்களது அனைத்து சக்தியையும் பயன்படுத்தி கொலையாளிகளை வேட்டையாடுவோம். எத்தனை காலம் ஆனாலும் அவர்கள் நீதியின் முன்னர் கொண்டு வரப்படுவார்கள் என்று கேமரூன் அதில் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai