Enable Javscript for better performance
சமூக தியாகிகள் ஐவர் நினைவு தினம்: கமுதி பகுதியி்ல் பலத்த பந்தோபஸ்து- Dinamani

சுடச்சுட

    

    சமூக தியாகிகள் ஐவர் நினைவு தினம்: கமுதி பகுதியி்ல் பலத்த பந்தோபஸ்து

    By தன.திராவிட மணி  |   Published on : 14th September 2014 06:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமநாதபுரம் மாவட்டம், கீழத்தூவலில் சமூக தியாகிகள் ஐவர் நினைவு தினம் அனுஷ்டிப்பு முன்னிட்டு, கமுதி, அபிராமம், பார்த்திபனூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. 

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1957-ம் ஆண்டு முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, அபிராமம் கடலாடி, பார்த்திபனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரு குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே சாதிக்கலவரம் கடுமையாக நடைபெற்றது. கலவரத்தை ஒடுக்க முதுகுளத்தூர் அருகே, கீழத்தூவலைச் சேர்ந்த போலீஸார், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த தவசியாண்டி, சித்திரைச்சாமி, சிவமணி, முத்துமணி, ஜெகநாதன் ஆகியோரைச் சுடடுக்கொன்றதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நினைவாக கீழத்தூவல் கிராமத்தினர் ஆண்டு தோறும் சமூக தியாகிகள் ஐவர் நினைவு நாள் அனுஷ்டித்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு 57-ம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சிகள் கீழத்தூவலில் உள்ள நினைவு ,ஸ்தூபி வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.தற்போது மாவட்டம் முழுவதும் போலீஸ் 144 தடை உத்தரவு போடப்பட்டிருப்பதால், கீழத்தூவல் கிராமத்திற்கு சொந்த வாகனங்களில் தவிர வேறு வாகனங்களில் செல்லவும், போலீஸ் முன் அனுமதி பெறாமல் நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில் வாகனன் ஆகியோர் தடை விதித்தனர்.

    இதையடுத்து மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை, உதவி காவல் கண்காணிப்பாளர்கள் நடராஜன்(முதுகுளத்தூர்), வினோத்குமார் சாந்தாராம்(பரமக்குடி)  சார் ஆட்சியர் சமிரன், வட்டாட்சியர் செ.ராமமூர்த்தி ஆகியோர் முகாமிட்டு, 500-க்கும் மேற்பட்ட போலீஸ் படையினருடன் கண்காணித்து, பலத்த பந்தோபஸ்து பணியி்ல் ஈடுபட்டிரு்நதனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai