Enable Javscript for better performance
ட்ரீ பேங்க் அமைப்பு ஒரு லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    ட்ரீ பேங்க் அமைப்பு ஒரு லட்சம் மரக்கன்றுகள் விநியோகம்

    By சென்னை  |   Published on : 14th September 2014 09:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடந்த 9 மாதங்களில் பல்வேறு சுப நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன என ட்ரீ பேங்க் தன்னார்வ அமைப்பு தெரிவித்துள்ளது.

    இது குறித்து இந்த அமைப்பின் நிறுவனர் முல்லைவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    சென்னை, செங்குன்றத்தில் வெள்ளிக்கிழமை(செப்.12) நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு, தாம்பூல பையுடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இதனுடன் சேர்த்து, கடந்த 9 மாதங்களில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரியில் நடைபெற்ற, பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட 209 சுப நிகழச்சிகளின் மூலம் பொதுமக்களுக்கு 99 ஆயிரத்து 200 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.

     சென்னையில் திங்கள்கிழமை(செப்.15) நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் 800 மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், ஒரு லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் எனும் இலக்கை ஓர் ஆண்டுக்குள் எட்ட உள்ளோம். இவற்றில் மருத்துவத் தன்மை கொண்ட செடிகள், மலர், கனி, காய்கறி, நிழல்தரும் வகைகளைச் சேர்ந்த மரக்கன்றுகள் ஆகியவை அடங்கும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai