Enable Javscript for better performance
தனியார் கல்குவாரி விபத்து தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகேயுள்ள இரும்பாளி தனியார் கருங்கல்குவாரியில் சனிக்கிழமை நடந்த விபத்தில் கல் அறுக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.

    மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள மனையப்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் செல்வேந்திரன் (52) இவர் அன்னவாசல் அருகேயுள்ள இரும்பாளியில் இயங்கி வரும் ஒரு தனியார் கருங்கல்குவாரியில் கல்அறுக்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் சனிக்கிழமையன்று கல்குவாரிக்குள் கல் அறுத்துக்கொண்டிந்துள்ளார். அப்போது மறுபுறம் அதேகல்குவாரியில் குடுமியான்மலையைச் சேர்ந்த ரமேஷ் (35) மற்றும் ஒடிஸாவைச் சேர்ந்த கணேசன் (28)  ஆகியோர் கிரேன் மூலம் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர்.

    அப்போது கிரேனில் இருந்த கல்தூக்க பயன்படும் பலம் வாய்ந்த கயிறு அறுந்து, அருகே வேலை செய்து கொண்டிருந்த  செல்வேந்திரன் மீது விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பலத்தகாயமடைந்த அவர் நிலை தடுமாறி மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

    இதுகுறித்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிந்து கிரேன் இயக்குபவர்களான ரமேஷ் மற்றும் கணேசன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai