Enable Javscript for better performance
மக்கள் பணி செய்ய அதிமுக அரசு தவறிவிட்டது: தேமுதிக குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் பணி செய்ய அதிமுக அரசு தவறிவிட்டது: தேமுதிக குற்றச்சாட்டு

    By எஸ். ஷேக்அப்துல்காதர்  |   Published on : 14th September 2014 02:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுகின்ற அதிமுக அரசு மக்கள் பணி செய்ய தவறி விட்டது என தேமுதிக தலைமை நிலைய செயலர் ப. பார்த்தசாரதி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.

    தேமுதிக 10 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தருவை பேருந்து நிலையத்தில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த தலைமை நிலைய செயலர் ப. பார்த்தசாரதி பேசியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை விஜயகாந்த் தொடங்கினார். தொடர்ந்து மக்கள் பிரச்னைக்காக தேமுதிக குரல் கொடுத்து வருகிறது.

    2011 இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான எதிர்கட்சியாக தேமுதிக உருவெடுத்தது. தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுக அரசு மக்கள் பணி செய்ய தவறிவிட்டது. மக்களை பிரச்னைகளை தீர்க்க எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கள் பிரச்னைக்காக தேமுதிகவினர் போராட வேண்டும் என்றார் அவர்.
    கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலர் கே. கணேஷ்குமார் ஆதித்தன் தலைமை வகித்தார்.

    தேமுதிக வெள்ள நிவாரணம்: முன்னதாக திருநெல்வேலி மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் ப. பார்த்தசாரதி எம்.எல்.ஏ. அளித்தப் பேட்டி: தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. ஆளும்கட்சியினர் எதிர்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துள்ளனர். காஷ்மீர் வெள்ள நிவாரணமாக கட்சி சார்பில் தலைவர் விஜயகாந்த் ரூ. 10 லட்சம் வழங்கி உள்ளார். தேமுதிக எம்.எல்.ஏ. க்கள் தங்களின்  ஒரு மாத சம்பளத்தை காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்கு வழங்கி உள்ளனர்.
    கட்சியின் 10 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி திருநெல்வேலி மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு மாவட்டங்கள் சார்பில் ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு்ள்ளது என்றார் அவர். 

    பேட்டியின்போது, மாநகர் மாவட்டச் செயலர் ஏ. முகம்மதுஅலி, கிழக்கு மாவட்டச் செயலர் கே. கணேஷ்குமார்ஆதித்தன், மேற்கு மாவட்டச் செயலர் அய்யம்பெருமாள், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே. ஜெயபாலன், மாநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் பி. ஆனந்தமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai