Enable Javscript for better performance
மேகாலயா: 6 தீவிரவாதிகள் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மேகாலயா மாநிலத்தில் பல்வேறு சம்பவங்களில் 6 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.இதுகுறித்து, பி.டி.ஐ.  செய்தியாளரிடம் காவல்துறை ஐ.ஜி. ராஜூ, ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

    இங்குள்ள கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் போலோம்ராம் வனப்பகுதியில் கரோ தேசிய விடுதலைப்படையினருக்கும் உல்ஃபா (அஸ்ஸôம் ஐக்கிய விடுதலை முன்னணி) இயக்கத்தினருக்கும்  இடையே சனிக்கிழமை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், கரோ தேசிய விடுதலைப் படையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.சோக்பாட் என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவர், கிராம மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

    கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் ராம்போக்ரி சோங்கித்தால் என்ற இடத்தில் தீவிரவாதி ஒருவர் என்கவுன்ட்டரில் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டார். அவரது பெயர் பவாங் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai