Enable Javscript for better performance
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க  வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    அதிமுகவுடன் கூட்டணி அமைக்க  வாய்ப்பில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

    By dn  |   Published on : 17th April 2015 11:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pon_radhakrishnan

    சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    இது குறித்து பொள்ளாச்சியில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:

    ஆந்திரத்தில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இதுதொடர்பாக ஆந்திர காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், செம்மரக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுபவர்களைக் கண்டறிய வேண்டும். புதிதாக உருவாகியுள்ள ஜனதா கூட்டணி சந்தர்பவாதக் கூட்டணியாகும். இந்தக் கூட்டணி விரைவில் உடைந்துவிடும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வலுவாக உள்ளது. அதிமுகவுடன் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சி பொய் பிரசாரம் செய்து வருகிறது. பாஜக மத அடிப்படையில் செயல்படாது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai