Enable Javscript for better performance
ஆண்டிபட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உறவினர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு: உறவினர் கைது

    By பாண்டி  |   Published on : 17th April 2015 01:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே முத்துரெங்காபுரத்தில் மாணவிக்கு அவரது உறவினர் பாலியல் தொந்தரவு செய்ததாக சைல்டு லைன் அமைப்பினர் ஆண்டிபட்டி மகளிர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளனர்.

    முத்துரெங்காபுரத்தை சேர்ந்தவர் மகாலெட்சுமி இவரது கணவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் பாம்பு கடித்து இறந்து விட்டார். இவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அப்பகுதியை சேர்ந்த பெருமாள்(32) என்பவர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் அவரது அப்பாவின் தங்கை மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து மாணவி சைல்டு லைன் அமைப்பினரின் 1098 என்ற எண்ணில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் சைல்டு லைன் அமைப்பின் தலைவர் சிவக்குமார் மற்றும் உறுப்பினர்கள் ராஜா, விஜயலெட்சுமி, மெர்லின், சண்முக வள்ளி ஆகியோர் கொண்ட குழு அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அதன் பின் ஆண்டிபட்டி மகளிர் காவல்நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, பெருமாள் என்பவரை வெள்ளிக்கிழமையன்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai