Enable Javscript for better performance
ஆற்றல் மிக்க தலைவராக ஜீ ஜின் பிங், மோடி: டைம் பத்திரிகை புகழாரம்- Dinamani

சுடச்சுட

    

    ஆற்றல் மிக்க தலைவராக ஜீ ஜின் பிங், மோடி: டைம் பத்திரிகை புகழாரம்

    By DN  |   Published on : 17th April 2015 07:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின் பிங் ஆகியோர் ஆற்றல் மிக்க தலைவர்களாக விளங்குவதாக "டைம்' பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

    அவர்கள் இருவரும் வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதிக்க உத்வேகத்துடன் செயல்படுவதாகவும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.  டைம் பத்திரிகை உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின் பிங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களைப் பற்றி, பல்வேறு பிரபலங்கள் கட்டுரை எழுதியுள்ளனர். மோடி குறித்த கட்டுரையை "இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி' என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியிருந்தார்.

    அதில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஒரு நாட்டின் பிரதமராக மோடி உயர்ந்ததைப் பற்றி அக்கட்டுரையில் ஒபாமா விவரித்துள்ளார். வறுமை ஒழிப்பு, கல்வி மேம்பாடு, பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட விஷயங்களை நிறைவேற்றுவது மோடியின் லட்சியத் திட்டம் என்றும் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai