Enable Javscript for better performance
இந்தோனேஷிய விமானத்தில் வெடிகுண்டு புரளி: விமானம் அவசர தரையிறக்கம் - Dinamani

சுடச்சுட

    

    இந்தோனேஷிய விமானத்தில் வெடிகுண்டு புரளி: விமானம் அவசர தரையிறக்கம்

    By dn  |   Published on : 17th April 2015 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    batik

    இந்தோனேஷியாவின் அம்பன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த புரளியால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இன்று காலை அம்பன் விமான நிலையத்தில் இருந்து 122 பயணிகளுடன் பதிக் ஏர் என்ற நிறுவனத்தின் விமானம் ஜகர்த்தா நோக்கி புறப்பட்டது.

    புறப்பட்ட சற்று நேரத்திலேயே, விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி, விமானம் மகசார் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    பயணிகள் உடனே வெளியேற்றப்பட்டனர். பின்னர் தீவிர சோதனை நடத்தப்பட்டதில், அதில் எந்தவித வெடிகுண்டும் இல்லை என தெரிய வந்தது.

    இந்த சம்பவம் குறித்து இந்தோனேஷிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai