Enable Javscript for better performance
இலங்கை: வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை: வாழ வழியின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

    By DN  |   Published on : 17th April 2015 04:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலங்கையில் மோசமான வாழ்க்கை நிலைமைகள் இருந்து வருவதால் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக வந்துள்ளனர்.

    இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த சமயத்தில் திரிகோணமலையைச் சேர்ந்த சத்தியசீலம், அவரது மனைவி பரமேஸ்வரி, மகள்கள் விடுதலை செல்வி, மேரி, அஞ்சலிதேவி ஆகியோர் 1999 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் ராமேஸ்வரத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.

    2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய்நாடான இலங்கைக்கு செல்ல விரும்பிய அவர்கள், அதற்கான சட்ட நடைமுறைகளை முடித்தபிறகு அங்கு சென்றனர்.

    இந்நிலையில், அங்கு வாழ்வதற்கான சூழ்நிலைகள் மோசமாக இருப்பதால் அங்கிருந்து மீண்டும் அகதிகளாக வந்துள்ளனர்.

    தனுஷ்கோடி கடற்கரை அருகில் உள்ள அரிச்சல்முனைக்கு வந்து சேர்ந்தவர்கள், இலங்கையில் ஐந்து ஆண்டுகளாக வசிப்பதற்கு ஒரு வீடு கூட வழங்கவில்லை என்று போலீஸாரிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

    இலங்கையில் இருந்து படகில் வருவதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியதாக போலீஸார் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai