Enable Javscript for better performance
உக்ரைன் தேசிய காவல் படை வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா- Dinamani

சுடச்சுட

    

    உக்ரைன் தேசிய காவல் படை வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கிறது அமெரிக்கா

    By DN  |   Published on : 17th April 2015 07:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சண்டையிட உக்ரைன் தேசிய காவல் படை வீரர்களுக்கு அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    உக்ரைனில் சிறப்புப் பயிற்சி அளிக்க வந்துள்ள படைப் பிரிவின் செயல் அதிகாரி ஜோஸ் மென்டஸ் இது தொடர்பாக கூறியதாவது:

    அமெரிக்க ராணுவத்தின் 173-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 300 வீரர்கள் மேற்கு உக்ரைனின் யாவோரிவ் பகுதிக்கு, இரு குழுக்களாக கடந்த செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை வந்திறங்கினர்.

    இவர்கள் ஆறு மாதங்கள் உக்ரைனில் தங்கி, அந்த நாட்டு ராணுவத்தின் மூன்று படைப் பிரிவினருக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பார்கள். திறன் மேம்பாடு, திட்டமிடுதல் உள்ளிட்டவற்றில் பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.

    இந்த நிலையில், உக்ரைன் ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்க அமெரிக்க ராணுவத்தினர் வந்துள்ளது ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai