Enable Javscript for better performance
கண்ணியத்தை குறைக்கும் மோடி பேச்சுக்கு பதிலடி கொடுப்போம்: ஆனந்த் சர்மா- Dinamani

சுடச்சுட

    

    கண்ணியத்தை குறைக்கும் மோடி பேச்சுக்கு பதிலடி கொடுப்போம்: ஆனந்த் சர்மா

    By DN  |   Published on : 17th April 2015 08:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anand-sharma

    இனிமேல் பிரதமர் பதவியின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் மோடி வெளிநாடுகளில் முந்தைய அரசுகளை விமர்சித்துப் பேசினால் அதே இடத்தில் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா, புது தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

    கனடா நாட்டில் டொரான்டோ நகரில் அந்நாட்டில் வாழும் இந்தியர்களிடையே பேசிய நரேந்திர மோடி, முந்தைய அரசுகளால் "குப்பைகளை சேர்த்து வைத்து விட்டு போய் விட்டார்கள். நாம் அதை அகற்றுவோம்” என்றும் “ முந்தைய அரசுகளால் ஏற்படுத்தப்பட்ட ஊழல் நாடு தோற்றத்தை மாற்றி, நாங்கள் அதை திறன்மிகு நாடாக இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுபோன்று வெளிநாட்டு மண்ணில் முந்தைய அரசுகள் குறித்து இழிவாகப் பேசுவதை மோடி நிறுத்திக் கொள்ள வேண்டும். இது அவரது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகிறது. உள்நாட்டு அரசியலை வெளிநாடுகளில் பேசக்கூடாது என்ற பாரம்பரியத்தை அவர் மீண்டும் உடைத்துள்ளார்.

    இதுபோன்ற கண்ணியமற்ற பேச்சை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இனிமேல் வெளிநாடுகளில் மோடி இவ்வாறு பேசினால், காங்கிரஸ் தலைவர்கள் யாராவது அங்கு நேரடியாகத் தோன்றி, உடனடியாக பதிலடி கொடுப்பார்கள்.

    தவறாக வழிநடத்தும் கலையில் மோடி தேர்ந்தவராக உள்ளார். பொய் வாக்குறுதிகளை அளித்து, தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார். இதை இந்தியாவில் வெற்றிகரமாக செயல்படுத்தினார். அவருக்கு எந்த பொறுப்புணர்ச்சியும் இல்லை. தற்போது, அதை வெளிநாட்டில் பரப்புகிறார் என்றார் ஆனந்த் சர்மா.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai