Enable Javscript for better performance
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஆலம் மீண்டும் கைது- Dinamani

சுடச்சுட

    
    Masarat-Alam

    காஷ்மீரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் கொடியைப் பயன்படுத்தியதற்காகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியதற்காகவும், பிரிவினைவாத இயக்கத் தலைவர் ஆலம் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கடந்த 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், காஷ்மீரில் ஆலம் தலைமையில் பேரணி நடைபெற்றது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசு சார்பிலும், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து நேற்று இரவு முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆலம், இன்று காலை கைது செய்யப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai