Enable Javscript for better performance
கிடைக்காத வாய்ப்புகளைப் பற்றி கவலையில்லை - 43 வயது பிரவீன் டாம்பே- Dinamani

சுடச்சுட

    

    கிடைக்காத வாய்ப்புகளைப் பற்றி கவலையில்லை - 43 வயது பிரவீன் டாம்பே

    By dn  |   Published on : 17th April 2015 05:59 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tambe11

    41 வயதில் 2013-ல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல்-லில் ஆட வந்தார் பிரவீன் டாம்பே. திறமையை நிரூபிக்க வயது ஒரு பொருட்டில்லை என்பதை ஒவ்வொரு மேட்சிலும் நிரூபித்துவருகிறார்.

    வியாழன் அன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகள் எடுத்தார். 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஐபிஎல்-லில் அதிக விக்கெட்டுகள் (4 விக்கெட்டுகள்) எடுத்தவர்களின் பட்டியலில் 7-ம் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் பயணம் பற்றி டாம்பே கூறியதாவது:

    "நான் குறைவான முதல் தரப் போட்டிகளிலேயே ஆடியுள்ளேன். அதனால் எனக்கு வருத்தமில்லை. உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடிவருகிறேன். கிடைக்காமல் போன வாய்ப்புகள் பற்றி நான் கவலைப்படுவதில்லை. கிடைத்த வாய்ப்புகளில் மகிழ்ச்சியுடன் ஆடிவருகிறேன். முதல் போட்டியில் எந்தளவுக்கு உற்சாகத்துடன் ஆடினேனோ அதேபோல உற்சாகம் குறையாமல் ஆடிவருகிறேன்.

    உடற்தகுதியில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். 43 வயதில், டி20க்குத் தேவைபடுகிற உடற்தகுதி இல்லாவிட்டால் கடினமாகிவிடும். கடுமையான டயட்டில் இருந்து, டி20க்கு ஏற்றவாறு பயிற்சிகளை மேற்கொள்கிறேன்.

    ராஜஸ்தான் அணியின் ஓய்வறையில் பல சர்வதேச வீரர்கள் இருந்தாலும் நான் தனி ஆளாக எண்ணியதில்லை. மிகவும் சவுகரியமாக உள்ளேன். எனக்கென்று எந்தக் குறிக்கோளும் வைத்துக்கொள்வதில்லை. டி20 போட்டியை மிகவும் மகிழ்ச்சியுடன் அனுபவித்து வருகிறேன்” என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai