Enable Javscript for better performance
கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை- Dinamani

சுடச்சுட

    

    கெஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை

    By DN  |   Published on : 17th April 2015 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sc

    தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட இரு அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

    கெஜ்ரிவால் மீது மத்திய மந்திரி நிதின் கட்காரி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்திலும், வழக்கறிஞரான சுரேந்திர குமார் சர்மா கர்கர்டூமா நீதிமன்றத்திலும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளிலேயே நிதின் கட்காரி தான் மிகப்பெரிய ஊழல் அரசியல்வாதி என்று கூறிய கெஜ்ரிவால் மீது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கட்காரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    அதே போல் தனது சமூக சேவை பணிகளை பாராட்டி 2013 தில்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்ட ஆம் ஆத்மி கட்சி, பின்னர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்று கூறி சுரேந்திர குமார் சர்மா கர்கர்டூமா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு விசாரணை இந்த வழக்கு விசாரணை குறித்து கெஜ்ரிவால் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்ததுடன், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai