Enable Javscript for better performance
கோடையில் மதுபிரியர்களை குளிர்விக்கும் புதிய ரக டக்கீலா பீர்! - Dinamani

சுடச்சுட

    

    கோடையில் மதுபிரியர்களை குளிர்விக்கும் புதிய ரக டக்கீலா பீர்!

    By DN  |   Published on : 17th April 2015 03:32 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுபிரியர்களை குளிர்விக்கும் வகையில், “டக்கீலா” என்ற புதுவகை மது, டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வகை மது, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் சமீப காலமாக புதுப்புது மதுவகைகளை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

    டாஸ்மாக் கடைகளில் கிங்பிஷர், கல்யாணி, புல்லட், 6000, மார்கோபோலோ உள்ளிட்ட பீர் ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் மதுபிரியர்களை குளிர்விக்கும் விதமாக புதிய ரக “டக்கீலா”  மது அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

    மெக்சிகோ நாட்டு பீர்: இதுவரை கிங்பிஷர், கல்யாணி, புல்லட், 6000, மார்கோபோலோ உள்ளிட்ட பீர் ரகங்கள் விற்பனை செய்து வந்த டாஸ்மாக், தற்போது விற்பனையை மேலும் அதிகரிக்கும் நோக்கத்தில் மெக்சிகோ நாட்டின் தேசிய பானமான இந்த டக்கீலாவை அறிமுகப்படுத்தி உள்ளது. இது மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, கோவாவில் உள்ள நிறுவனத்தில் பாட்டிலிங் செய்யப்பட்டு, தமிழகத்துக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 750 மில்லி கொண்ட புல் பாட்டில் டக்கீலா பீர் ரூ.1560க்கும், 180 மில்லி கொண்ட குவார்ட்டர் பாட்டில் ரூ.390க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

    அதாவது மற்ற சாதாரண வகை மதுவுடன் விலையை ஒப்பிடுகையில், இதன் விலை 4 மடங்கு அதிகம் என்றாலும், இம்மதுவில்  கிடைக்கும் உற்சாகமே தனி என மதுப்பிரியர்கள் கூறுகின்றனர். இவ்வகை டக்கீலா மது, ஹோய்ஸ்ட் என்ற பெயருடன் சில்வர் டக்கீலா, கோல்டு டக்கீலா என  இரு பெயர்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

    இதுவரை கோவா, மும்பை,  பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும், தமிழகத்தில் ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே கிடைத்து வந்த டக்கீலா, இப்போது டாஸ்மாக் கடைகளிலும் கிடைப்பது மது பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai