Enable Javscript for better performance
சத்துணவுப் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களால் பாதிக்கப்படும் மக்கள் - Dinamani

சுடச்சுட

    

    சத்துணவுப் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களால் பாதிக்கப்படும் மக்கள்

    By கோத்தகிரி  |   Published on : 17th April 2015 07:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவு மையப் பணிகளில் உள்ளாட்சித் துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவதால், பல்வேறு சான்றுகளுக்காக அரசு அலுவலகம் வரும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள்  புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், சத்துணவு மையங்களின் பணிகள் பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

    இதையொட்டி, கோத்தகிரியில் மொத்தமுள்ள 71 சத்துணவு மையங்களிலும் மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை மேற்கொள்வதற்காக

    வருவாய்த்துறை, ஊராட்சி, பேரூராட்சி அலுவலக அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்கு சென்றுவிடுவதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

      இதுகுறித்து, கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு தலைவர் கணேசன், துணைச் செயலர் செல்வராஜ் ஆகியோர் கூறியது:

    மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, சத்துணவு மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் உணவு வழங்க வேண்டியது அலுவலர்களின் கடமை.

    ஆனால், பல்வேறு சான்றுகள் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு வரும்

    பொது மக்களுக்கும் சிரமம் ஏற்படாதவாறு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

      இதுகுறித்து, மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai