Enable Javscript for better performance
சத்துணவு பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ

    By DN  |   Published on : 17th April 2015 04:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko1

    வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்துணவு ஊழியர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணாமல் மிரட்டுதல், பணியிடை நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    சத்துணவு மையங்களில் வெளியாட்களை வைத்து பணிகளை தொடருவது பிரச்சினைக்கு தீர்வாகாது. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    மேலும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தையும் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai