Enable Javscript for better performance
சீனா: அரசு ரகசியங்களை கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை- Dinamani

சுடச்சுட

    

    சீனா: அரசு ரகசியங்களை கசியவிட்டதாக மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை

    By DN  |   Published on : 17th April 2015 05:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kaviu

    சீனாவில் அரசு ரகசியங்களை கசியவிட்டதாக கூறி பிரபல மூத்த பெண் பத்திரிகையாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவின் மதிப்புமிக்க மூத்த பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான காவ் யூ, கருத்து சுதந்திரம் மற்றும் எழுத்துரிமைக்காக போராடிவந்தவர். இவர் சீனாவில் ஆளும் கட்சியாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசையும், அரசு அதிகாரிகளையும் எதிர்த்து கடுமையாக விமர்சித்து பல கட்டுரைகள் எழுதிவந்தார்.

    இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 'ரகசிய கோப்பு எண்-9' என்ற கோப்பை வெளிநாட்டில் இருந்து இயங்கிவரும் சீனமொழி ஊடகம் ஒன்றின்  இணையதளங்களுக்கு கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அவர் மீது தேசவிரோத சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

    சுமார் ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் காவ் யூவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக காவ் யூ அறிவித்துள்ளார்.

    'ரகசிய கோப்பு எண்-9' என்ற ஆவணத்தில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியின் சித்தாந்த திட்டங்களான மேற்கத்திய அரசியல் அமைப்பு ஜனநாயகம், பேச்சு சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் குறித்த விவாதங்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று தனது கட்சி தொண்டர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai